FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

19 December 2015

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள்: பள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

      மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.


மழை வெள்ள பாதிப்பு
மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 33 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. 


இந்த நிலையில், 24-ந் தேதி மிலாது நபி, 25-ந் தேதி கிறிஸ்துமஸ், ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு ஆகியவை வருகின்றன. இந்த 3 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற குழப்பத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தனர். 

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
24-ந் தேதி முதல் விடுமுறை
2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட விடுமுறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறைவிடப்பட்டுள்ளது. மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் இந்த விடுமுறையில் அடங்கும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் 24, 25, 27, ஜனவரி 1-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மட்டும் நடத்தக்கூடாது. மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகள் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும். 
இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
Source DAILY THANTHI

No comments:

Post a Comment