FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 October 2015

கருவூலத்தில் அலுவலக உதவியாளர் பணி

தூத்துக்குடி கருவூலத்தில் காலியாக உள்ள
அலுவலக உதவியாளர் பணிக்கு
விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட
ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்
குறிப்பு:
கருவூல கணக்குத் துறையில், தூத்துக்குடி
மாவட்டக் கருவூல அலகில் காலியாக உள்ள
அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதி வாய்ந்த
நபர்கள் தேர்வு செய்வதற்கு தொழிலாளர் மற்றும்
வேலைவாய்ப்புத் துறை மூலம் அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி வயது மற்றும் பிற தகுதிகள்
பெற்றிருப்பவர்கள் இன சுழற்சி முறையில்
உள்ளவர்கள் மட்டும் விண்ணப்ப படிவத்தை
பூர்த்தி செய்து மாவட்டக் கருவூல அலுவலர்,
மாவட்டக் கருவூலம், 329,சிவந்தாகுளம் சாலை,
தூத்துக்குடி என்ற முகவரிக்கு அக்டோபர் 31
ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம், கல்வித்தகுதி, வயது மற்றும்
பிற தகுதிகள் இன சுழற்சி விவரங்களை
www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில்
பார்த்து தெரிந்து கொள்ளலாம் என செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment