FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

7 October 2015

பொதுத் தேர்வை பல முயற்சிகளில் எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அளிக்க அரசாணை வெளியீடு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை
பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு
ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை
வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு
வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக பள்ளிக்
கல்வித் துறையின் செயலர் டி.சபிதா
வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச்-
ஏப்ரல், ஜூன்-ஜூலை, செப்டம்பர்-அக்டோபர்
ஆகிய பருவங்களில் நடத்தப்படுகின்றன. இந்தத்
தேர்வு எழுதுபவர்களில் 85 சதவீதம் முதல் 90
சதவீதம் பேர் மட்டுமே ஒரே முறையில் தேர்ச்சி
பெறுகின்றனர். மீதமுள்ளோர் வெவ்வேறு
பருவங்களில் தேர்வு எழுதி அனைத்துப்
பாடங்களிலும் தேர்ச்சி பெறுகின்றனர். இதனால்,
அவர்கள் 2-க்கு மேற்பட்ட மதிப்பெண்
சான்றிதழ்களை வைத்திருக்கின்றனர். இவர்கள்
ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழைக்
கோருகின்றனர்.
நிரந்தரப் பதிவெண் வழங்கப்பட்டவர்களுக்கு
மட்டுமே ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்
வழங்க முடியும் என அரசுத் தேர்வுகள்
இயக்குநர் தனது பரிந்துரையில்
தெரிவித்துள்ளார்.இனி பொதுத்தேர்வுகளை 1-
க்கும் மேற்பட்ட பருவங்களில் எழுதி தேர்ச்சி
பெறும்போது, ஒவ்வொரு பருவத்துக்கும்
தனித்தனி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
அதோடு, தேர்வர்கள் தங்களது இறுதி
முயற்சியில் அனைத்துப் பாடங்களிலும்
தேர்ச்சியடைந்தால், அந்தப் பருவத்துக்குரிய
மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாது. அப்போது
வெவ்வேறு பருவங்களில் தேர்ச்சி பெற்ற
மதிப்பெண்களை ஒன்றாகத் தொகுத்து
ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க
அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி
அளிக்கப்படுகிறது.
இனி நிரந்தரப் பதிவு எண்! 2016-ஆம் ஆண்டு
மார்ச் மாதத்தில் இருந்து தேர்வு
எழுதுவோருக்கு நிரந்தரப் பதிவெண்கள்
வழங்கப்படுகிறது. தேர்வர் தேர்ச்சி பெறும் வரை
இந்த எண்ணைப் பயன்படுத்துவதற்காக அரசு
தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுமதி அளித்து
ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment