FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

7 October 2015

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா மீண்டும் விண்ணப்பிக்க வேண்டுகோள்

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்
இல்லாதவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க
வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல்
அதிகாரி, சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
தமிழகத்தில், கடந்த மாதம், 15ம் தேதி, வரைவு
வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதற்கு
முன், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க,
திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, ஏராளமானோர்
நேரடியாகவும், 'ஆன் - லைன்' மூலமாகவும்
விண்ணப்பித்திருந்தனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதும்,
அதை பார்த்த பலர் ஏமாற்றமடைந்தனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, இடம்
மாற்றம் செய்யக் கோரி, ஆன் - லைனில்
விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்களின்
பெயர், பட்டியலில் இடம் பெறவில்லை; தொகுதிh
மாற்றமும் செய்யப்படவில்லை.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
சந்தீப் சக்சேனா கூறியதாவது:வரைவு
வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன்
விண்ணப்பித்தவர்கள் பெயர், பட்டியலில்
சேர்க்கப்படவோ, திருத்தம் செய்யப்படவோ
இல்லை என்றால், அவர்கள் மனு
நிராகரிக்கப்பட்டிருக்கலாம். எனவே, அவர்கள்
மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுபோன்ற தவறுகள் தொடராமல் இருக்க,
விண்ணப்பித்தவர்களுக்கு, ஒரு அடையாள எண்
வழங்கப்படும். அந்த எண்ணை பயன்படுத்தி,
விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை
விவரத்தை அறிய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.11ல் வாக்காளர் சிறப்பு
முகாம்: சந்தீப் சக்சேனா மேலும்
கூறியதாவது:கடந்த மாதம் முதல், வாக்காளர்
பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது.
இதுவரை, இரு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு
உள்ளன. முதல் முகாமில், 5.53 லட்சம்;
இரண்டாவது முகாமில், 8.40 லட்சம்;
அலுவலகத்தில், 52 ஆயிரம் என, மொத்தம்,
14.45 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு
உள்ளன.
இவற்றில், வாக்காளர் பட்டியலில் பெயர்
சேர்ப்பதற்கான விண்ணப்பங்களில்,
முதன்முறையாக விண்ணப்பித்தவர்கள், மற்ற
திருத்தங்கள் கோரி விண்ணப்பித்தவர் என,
பிரிக்கும் பணி நடக்கிறது.
பெயர் நீக்கக் கோரி, முதல் முகாமில், 15 ஆயிரம்;
இரண்டாவது முகாமில், 45 ஆயிரம்;
அலுவலகங்களில், 5,000 விண்ணப்பங்கள்
பெறப்பட்டு உள்ளன. அரசியல் கட்சிகள்,
கூடுதலாக ஒரு வாக்காளர் சிறப்பு முகாம் நடத்த
கோரின. அதை ஏற்று, 11ம் தேதி, சிறப்பு
முகாம், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும்
நடக்கிறது. பெயர் இல்லாதவர்கள், அன்று
விண்ணப்பிக்கலாம். நவ., 24ம் தேதிக்குள், அதன்
மீது நடவடிக்கை எடுக்கப்படும்; நடவடிக்கை
விவரம், மொபைல் மூலம்
தெரியப்படுத்தப்படும்.
ஓட்டுச்சாவடி அலுவலர், வீட்டுக்கு வரும் நாள்;
அவரது அறிக்கை விவரமும் தெரிவிக்கப்படும்.
இது தொடர்பாக, கலெக்டர்களுடன், 9ம் தேதி
ஆலோசிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment