FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

10 October 2015

வாக்காளர் விண்ணப்பம் விவரம் அறியதேர்தல் கமிஷன் 'ஈசி' திட்டம் அறிமுகம்

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க,திருத்தம் செய்ய, முகவரி மாற்ற
விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பத்தின்
மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிந்து
கொள்ள, தேர்தல் கமிஷன், 'ஈசி' என்ற
திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழக
தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா
கூறியதாவது:வாக்காளர் பட்டியலில் உள்ள
விவரம் தொடர்பாக, வாக்காளர்கள் பல
சேவைகளை பெறுவதற்காக, நாட்டிலேயே
முதன்முறையாக தமிழகத்தில், 'ஈசி' என்ற
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டம் மூலம், தமிழக மக்கள், வாக்காளர்
பட்டியல் மற்றும் தேர்தல் தொடர்பான
சேவைகளை, இணையதளம் உட்பட பல
அணுகுமுறைகளில் பெறலாம். இதை, 'கூகுள்
பிளே ஸ்டோரில்' இருந்து, ஆண்ட்ராய்டு
'ஆப்ஸ்' மூலம், https:/play.google.com/store/
apps/details?id=com.uniphore.easy -ல் பெறலாம்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இணையதளம்
www.elections.tn.gov.in/easy மூலமாகவும்
பெறலாம். எஸ்.எம்.எஸ்., மூலம் அறிய, 94441
23456 என்ற எண்ணுக்கு, 'EPIC epic number
டைப் செய்து அனுப்ப வேண்டும்.ஈசி திட்டம்
மூலம், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல்,
திருத்தம் செய்தல், முகவரி மாற்றல்,
விவரங்களை உறுதிப்படுத்துதல் போன்றவற்றை
மேற்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை
விவரங்களையும், பொதுமக்கள் இணையதளம்
மூலம் அறிந்து கொள்ளலாம்.விண்ணப்ப
எண்ணை பதிவு செய்தால், விண்ணப்பம் ஆய்வு
செய்யப்பட்டுள்ளதா, இல்லையா; வாக்காளர்
பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா, இல்லையா
போன்ற விவரங்களை அறிய முடியும்.
வாக்குச்சாவடி அலுவலர், கள ஆய்வுக்கு வந்து
சென்ற விவரம், வாக்காளருக்கு எஸ்.எம்.எஸ்.,
மூலம் தெரியப்படுத்தப்படும். எனவே,
வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடுகளுக்கு
செல்லாமல், ஏமாற்ற முடியாது.இவ்வாறு சந்தீப்
சக்சேனா தெரிவித்தார்.

No comments:

Post a Comment