FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

16 October 2015

ஆசிரியர்களுக்கு ஜாலி பொனிடிக் ஆங்கில பயிற்சி!

அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாலி
பொனிடிக் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டது.
மாநிலத்தில் உள்ள, அனைத்து அரசு பள்ளிகளில்
பயிலும் மாணவர்களும் பொனிடிக் மெத்தடாலஜி
(ஒலிப்பு முறை) மூலம் எளிதில் ஆங்கிலம்
கற்று
கொள்வதற்கான திட்டம் கடந்த, 2014ம் ஆண்டு
துவங்கப்பட்டது. முதற்கட்டமாக, அனைத்து
ஆரம்பப் பள்ளிகளிலும், இந்த முறையை
பயன்படுத்தி, ஆங்கில கல்வியை
பயிற்றுவிக்கும் வகையில், நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்காக
சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்
ஒருங்கிணைப்புடன், 42 பகுதிகள் அடங்கிய,
டிவிடி ஒலி உச்சரிப்பு கையேடு வழங்கப்பட்டு
வருகிறது.
இதன் மூலம் ஒரு மணி நேரத்தில், 5000
வார்த்தைகளை மாணவர்கள் எளிதாக கற்று,
நினைவில் நிறுத்திக் கொள்ள முடியும்.
இதன்படி, ஆங்கிலம் பேசும் சிறப்பு பயிற்சி
முகாம், பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
ஆரம்பப் பள்ளிகளுக்காக, ஜாலி பொனிடிக் என்ற
பெயரில் நடக்கும் இத்திட்டம், நீலகிரியில் நான்கு
தாலுகாக்களில் துரிதமாக செயல்பட்டு
வருகிறது. இதற்காக, அனைத்து ஆரம்பப் பள்ளி
ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள்
அளிக்கப்பட்டு, கையேடுகள்
வழங்கப்பட்டுள்ளன. நான்கு தாலுகாக்களில் ஒரு
வாரம் நடந்த பயிற்சி முகாம்களில், 324
பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பயிற்சி
பெற்றனர். இதன் முடிவில், ஆசிரியர்கள்,
மாணவர்களுக்கான ஏழு புத்தகங்கள்,
அட்டைகள், சுவரொட்டிகள் அடங்கிய கிட்
வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை
தொண்டு நிறுவன நிர்வாகி டாக்டர் கோமதி,
பேராசிரியர் சுதாகரன் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment