FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

16 October 2015

மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்

மாணவர்களுக்கான சான்றுகள் வழங்க, சில
பள்ளிகளை ஒருங்கிணைத்து தனிமையங்கள்
அமைத்து, 'ஆன்-லைனில்'சான்றுகள் வழங்க
அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் 6,10, பிளஸ்2 படிக்கும்
மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமான
சான்றுகள் அந்தந்த பள்ளிகள் மூலம்
விண்ணப்பித்து, தாலுகா அலுவலகங்களில்
மொத்தமாக பெற்று
வினியோகிக்கப்படுகிறது.இதற்காக,
மாணவர்களிடம் ஆகஸ்ட், செப்டம்பரில் மனுக்கள்
பெறப்பட்டு,அந்தந்த தாலுகா அலுவலகத்தில்
ஒப்படைக்கப்படும். அங்கு வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.
ஐ.,க்கள், தாசில்தார் கையெழுத்து பெற்று,
டிசம்பரில் சான்றுகள் வழங்கப்படும்.
சான்றுகள் பெற தாலுகா அலுவலகங்களுக்கு
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பலமுறை
அலைய நேரிடும். இதனால் கல்விப்பணி
பாதிக்கப்படும்.தற்போது, வருவாய் துறையில்
சான்றுகள் 'ஆன்-லைனில்' வழங்கும்
நடைமுறை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு
சான்றுகள் பெற, தலைமை ஆசிரியர்கள் தாலுகா
அலுவலகத்திற்கு அலைவதை தவிர்க்க, 10
முதல் 12 ம் வகுப்பு பள்ளிகளை ஒருங்கிணைத்து
ஏதாவது ஒரு பள்ளியில் பொதுமையம்
அமைக்கப்படுகிறது. இப்பொது மையங்களுக்கு
தனி 'பாஸ் வேர்டு, ஐ.டி.' வழங்கப்படும்.
இந்த பொது மையத்திற்கு உட்பட்ட பள்ளிகள்,
மாணவர்களுக்கான சான்று பெற மனுக்களை
வழங்க வேண்டும். அவை 'ஸ்கேன்'
செய்யப்பட்டு, 'ஆன்-லைன்' மூலம் தாலுகா
அலுவலகத்திற்கு அனுப்பப்படும். 'ஆன்-
லைனில்' வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் மனுவை
பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு தாசில்தார்
டிஜிட்டல் கையெழுத்துடன் சான்று வழங்க
பரிந்துரை செய்வார்.தாசில்தார் வழங்கும் 3
வகையான சான்றுகளை அந்தந்த பள்ளியிலேயே
'பிரின்ட் -அவுட்' ஆக சான்றுகளை பெற்று
கொள்ளலாம். இப் புதிய நடைமுறை யால்
தலைமை ஆசிரியர்களுக்கு அலைச்சல்
குறையும்.சிரமமின்றி பள்ளி மாணவர்கள்
சான்றுகள் பெற முடியும்.

No comments:

Post a Comment