FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 October 2015

ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான "பைல்"ஓரங்கட்டப்பட்டது-- தினமலர் டீக்கடை பெஞ்ச் --

ஆசிரியர்கள்
கோரிக்கை தொடர்பான, 'பைலை' ஓரங்கட்டி
வச்சுட்டாங்களாம்ங்க...'' என்ற
அந்தோணிசாமியைப் பார்த்து, விக்கித்து நின்ற
அண்ணாச்சி, ''என்ன வே சொல்லுதீரு... பெரிய
அளவுல போராட்டம் நடத்தி, பள்ளிகளை
ஸ்தம்பிக்க வச்சதெல்லாம் அவ்வளவுதானா...''
எனக் கேட்டார்.
''ஆமாங்க... ஜாக்டோ நிர்வாகிகள் தன்னை
வந்து சந்திக்கலைன்னு, பள்ளிக்கல்வி செயலக
அதிகாரி ரொம்பவே கோவத்துல இருக்காங்க...
அவங்க நெனச்சிருந்தா, போராட்டம் நடந்த
அன்னிக்கே, மேலிட கவனத்துக்கு விஷயத்தை
கொண்டு போயிருக்கலாம்... ஆனா, தலைமைச்
செயலருக்கு கூட கொண்டு போகலை...
''செயலகத்துக்கு வந்து மனு குடுக்காமல்,
இயக்குனர்கள் கூட்டிய கூட்டத்துல மட்டும்
கலந்துக்கிட்டா, கோரிக்கையை நிறைவேத்த
முடியுமா... இப்போதைக்கு அவங்க, 'பைலை'
திறக்க வேண்டாம்னு
ஓரங்கட்டிட்டாங்களாம்ங்க...'' என்றார்
அந்தோணிசாமி.

No comments:

Post a Comment