FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

4 October 2015

ஜாக்டோ' வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடியாது

பகுதிநேர ஆசிரியர் முடிவு
அக்., 8ல் 'ஜாக்டோ' நடத்தும் ஆசிரியர்கள்
வேலை நிறுத்தப் போராட்டத்தில், பகுதிநேர
ஆசிரியர்கள் பங்கேற்க மாட்டார்கள்,' என,
பகுதிநேர ஆசிரியர் சங்க கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.
மதுரையில் கூட்டமைப்பு தலைவர்
சோலைராஜா, அமைப்பாளர் ஜேசு ராஜா, துணை
அமைப்பாளர் ஆனந்தராஜூ, செயலாளர்கள் ராஜா
தேவகாந்த், ஜெகதீசன் கூறியது:
மத்திய அரசின் சம்பளத்திற்கு இணையான
சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட 20
கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஜாக்டோ'
அமைப்புசார்பில், அக்.,8ல் ஆசிரியர்கள் வேலை
நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இவர்களுக்கு பகுதிநேர ஆசிரியர்களாகிய நாங்கள்
ஆதரவு தரவில்லை.தமிழகத்தில் உடற்கல்வி,
ஓவியம், தையல், இசை, கம்ப்யூட்டர்
அறிவியல், வேளாண்மை,வாழ்க்கை கல்வி,
கட்டடக்கலை பிரிவுகளில் 16 ஆயிரத்து 549 பேர்,
பகுதி நேரமாக பள்ளிகளில் பணிபுரிகின்றனர்.
எங்களுக்கு சமீபத்தில் தான் ஊதிய
உயர்வுவழங்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பணிக்கும்
தீர்வு காண்பதாக முதல்வர்
தெரிவித்துள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டால்,
பணிவாய்ப்பு பாதிக்கப்படலாம். சங்கத்தால்
யாரும் வேலையிழக்கக்கூடாது. ஜாக்டோ
வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம்,
என்றனர்.

No comments:

Post a Comment