FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

11 October 2015

ஏர்செல் தொலைதொ பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இலவச அடிப்படை இணைய வசதி!

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை,
தமிழ்நாடு வட்டத்தை சேர்ந்த அனைத்து பிரீபெய்ட்
வாடிக்கையாளர்களுக்கும் இலவச அடிப்படை
இணைய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக ஏர்செல், தெற்கு வர்த்தக
செயல்திட்டத் தலைவர் சங்கரநாராயணன்
கூறியதாவது:
ஏர்செல் தமிழகத்தில் குறிப்பாக கிராமப்
பகுதிகளில் அதிக வாடிக்கையாளர்களைக்
கொண்டுள்ளது. மொபைல் இன்டர்நெட் பலரது
வாழ்வின் இன்றியமையாத அம்சமாக திகழ்கிறது.
இன்டர்நெட் பேக் ரீசார்ஜ் செய்தால் சில
முக்கியமான தருணங்களில் நெட் பேக் தீர்ந்து
இன்டர்நெட்டை பயன்படுத்த முடியாத நிலை
ஏற்படும். இதை தடுத்து தங்குதடையில்லாத
இன்டர்நெட் கிடைக்க செய்யும் நோக்குடன் புதிய
திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஏர்செல் நிறுவனம் நடத்திய ஆய்வில் 84 சதவீதம்
பேர் குறைந்த அளவிலான டேட்டாவையே செலவு
செய்கிறார்கள். அவர்கள் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்,
டிவிட்டர், இ-மெயில், கூகுள்
ஆகியவற்றுக்குதான் இன்டர்நெட்டை
பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள 14 சதவீதம்
பேர்தான் வீடியோ காலிங், வீடியோ பதிவிறக்கம்
போன்றவற்றுக்கு பயன்படுத்துகிறார்கள். எனவே
அந்த 86 சதவீதம் பேர் தங்குதடையின்றி
இன்டர்நெட்டை பயன்படுத்த இந்த புதிய திட்டம்
உதவும்.
இதன்படி புதிதாக ஏர்செல் பிரீபெய்ட்
வாடிக்கையாளராக சேரும் அனைவருக்கும் 90
நாட்களுக்கு இலவச அடிப்படை இன்டர்நெட் வசதி
கிடைக்கும். 2ஜி, 3ஜி வாடிக்கையாளர்கள்
அனைவரும் 64 கே.பி.பி.எஸ். வேகத்தில்
இன்டர்நெட்டை இலவசமாக
பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதன்பிறகு ரூ.144-க்கு ரீசார்ஜ் செய்தால் அதற்கு
முழு டாக்டைம் மெயின் பேலன்ஸில்
கொடுக்கப்படும். கூடவே 28 நாட்களுக்கு இலவச
அடிப்படை இன்டர்நெட் கிடைக்கும். ஒவ்வொரு
முறை ரூ.144-க்கு ரீசார்ஜ் செய்யும்போதும்
இச்சலுகை நீண்டுகொண்டே போகும்.
ஏற்கெனவே ஏர்செல் பிரீபெய்ட்
வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் ஒருமுறை
ரூ.144-க்கு ரீசார்ஜ் செய்தால் முழு டாக்டைமுடன்
90 நாட்களுக்கு இலவச அடிப்படை இன்டர்நெட்
கிடைக்கும். அதன்பிறகு ஒவ்வொரு முறை
ரூ.144-க்கு ரீசார்ஜ் செய்யும்போதும் இச்சலுகை
நீண்டுகொண்டே போகும்.
இந்த வசதியை தமிழகம், ஆந்திரம், கேரளம்,
கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் பயன்படுத்த
முடியும். விரைவில் இந்தியா முழுவதும்
இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான
முயற்சியில் ஏர்செல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment