FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

2 October 2015

கரூரில் பிளாஸ்டிக் பாட்டிலால் சுற்றுச்சுவர்: ஆசிரியர்கள், மாணவியருக்கு பாராட்டு

அரசுபள்ளியில், பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம்
சுற்றுச்சுவர் கட்டிய, ஆசிரியை மற்றும்
மாணவியருக்கு, சர்வதேச அளவில் பாராட்டு
கிடைத்துஉள்ளது.கரூர் மாவட்டம், தாந்தோணி
தாலுகா, ஆச்சிமங்கலம் கிராமத்தில் உள்ள,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 500
மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
கருத்து கேட்புஇப்பள்ளியின் முன்,
சுற்றுச்சுவர் இன்றி, திறந்தவெளி கழிவுநீர்
ஓடையால், மாணவ, மாணவியருக்கு நோய்
தொற்று அபாயம் ஏற்பட்டது. இதைத் தடுக்க,
ஓடையை மூடுவதா அல்லது பள்ளிக்கு
சுற்றுச்சுவர் கட்டுவதா என, பள்ளி
நிர்வாகத்தினர் யோசித்தனர்.
சுவர் கட்ட முடிவானாலும், போதிய
நிதியில்லாததால், குறைந்த செலவில் சுவர்
கட்டுவது குறித்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும்
கிராம மக்களிடம் கருத்து
கேட்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்க,
மாநில செயல்வழி கற்றல் முறை
ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை உமா மகேஸ்வரி,
ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியை சசிரேகா
ஆகியோர், பிளாஸ்டிக் பாட்டில்களால் சுவர் கட்ட
திட்டமிட்டனர்.
மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர், 1,800
காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்தனர்.
காலி பாட்டிலில், குழைவாக்கப்பட்ட மண் நிரப்பி,
செங்கல் போல் அடுக்கி சுற்றுச்சுவர்
எழுப்பினர். 'டிசைன் பார் சேஞ்ச்' இந்தச் சுவர்
தான், செயல்வழி கற்றல் திட்டத்தில், நம்
நாட்டில், முதல் பரிசையும்; உலக அளவில், வட
அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோ வில்
நடைபெற்ற மாநாட்டில், முதல் ஐந்து
இடங்களுக்குள் தேர்வாகி, பரிசு பெற்றுள்ளது.
ஆசிரியை சசிரேகா மற்றும் மாணவியரின்
பிரதிநிதியாக, ஏழாம் வகுப்பு மாணவி
மேகதர்ஷினி ஆகியோர் மெக்சிகோவுக்கு
அழைக்கப்பட்டு, பாராட்டப்பட்டு
உள்ளனர். இதுகுறித்து ஒருங்கிணைப் பாளர்
உமா மகேஸ்வரி கூறியதாவது: செயல்வழி
கற்றல் திட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும்,
40 ஆசிரியர்கள், தனித்தனியே திட்டங்கள்
மேற்கொண்டனர். 'டிசைன் பார் சேஞ்ச்'
அமைப்பு, தேசிய அளவில், ஆமதாபாத்தில்
நடத்திய போட்டியில், ஆச்சி மங்கலம் பள்ளியின்
பிளாஸ்டிக் பாட்டில் சுற்றுச்சுவர் திட்டம், தேசிய
அளவில் முதல் பரிசாக, 50 ஆயிரம் ரூபாய்
பெற்றது. பின், மெக்சிகோவுக்கு அழைக்கப்பட்டு
கவுரவிக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திட்டக் குழுவினரை, கல்வி அமைச்சர்
வீரமணி, முதன்மை செயலர் சபிதா மற்றும்
அதிகாரிகள் அழைத்து பாராட்டினர்.

No comments:

Post a Comment