FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

7 October 2015

ஆசிரியைகள் இனி 'கோட்' அணிய வேண்டும் - சோதனை முறையில் அமலுக்கு வந்தது

சமூக விரோதிகள் மற்றும் குறும்புத்தனமான
மாணவர்களின் கேலி, கிண்டல்களில் இருந்து
தப்பிக்கும் வகையில், அரசு பள்ளி
ஆசிரியைகளுக்கு, மேலங்கி திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பருவ வயதை
எட்டும் மாணவர்கள், சமூக விரோத
செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள், சமீப
நாட்களாக அதிகரித்துள்ளன. மேலும், 18 வயது
பூர்த்தி அடையாத, பிளஸ் 2 மாணவர்கள்,
ஆசிரியைகளை கேலி, கிண்டல் செய்யும்
சம்பவங்களாலும், கல்வித் துறையினர்
அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
இதையடுத்து, ஆசிரியர்களுக்கு உடை
கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து,
ஏப்ரலில், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும்
அதிகாரிகள் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
இதில், பல பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி,
அனுமதிக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில்,
மதுரை மாவட்டத்தில், ஆசிரியை களை,
மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகள் கேலி,
கிண்டல் செய்யும் சம்பவங்கள், தொடர்ந்து
அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து, மதுரை மாவட்ட போலீசார்
விசாரித்து, மாணவர்களின் பெற்றோரை
அழைத்து அறிவுறுத்தினர். மேலும், கல்வி
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி,
ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு
வர அறிவுறுத்தினர்.
இதன்படி, சில மாணவர்களின் தவறான செய்கை
மற்றும் பார்வைகளில் இருந்து தப்பிக்க,
ஆசிரியைகளுக்கு மட்டும், சேலையுடன், 'மேல்
கோட்' என்ற மேலங்கி திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.மதுரை
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஏஞ்சலோ
இருதயசாமி உத்தரவுப்படி, மதுரை பேரையூர்
தாலுகா வன்னிவேலன் பட்டி அரசு உயர்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன், இந்த
திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
'பள்ளிக்குள் இனி, கண்டிப்பாக மேல்கோட் அணிய
வேண்டும்' என, ஆசிரியைகள்
அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.'மற்ற
மாவட்டங்களில், மாவட்ட முதன்மைக் கல்வி
அதிகாரி ஒப்புதல் பெற்றபின், இந்த உடை
கட்டுப்பாட்டை அமல்படுத்தலாம்' என,
அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
அமல்பள்ளிகளில், ஆசிரியர், ஆசிரியை, மாணவர்,
மாணவியர் இடையிலான தவறான நட்புகளை
கட்டுப்படுத்த, பள்ளிக்கல்வித் துறை உடை
கட்டுப்பாட்டை கொண்டு வர உள்ளதாக, ஏப்.,
25ம் தேதி, நமது நாளிதழில் செய்தி
வெளியானது.
அதன்படி, கல்வித் துறையின் தீவிர
பரிசீலனையில் இருந்த மேலங்கி திட்டம்,
தற்போது சோதனை முறையில் அமலுக்கு
வந்துள்ளது

No comments:

Post a Comment