FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

5 October 2015

வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை.

வங்கிகளுக்கு இம்மாதம், தொடர்ந்து ஐந்து
நாட்கள் விடுமுறை. எனினும்,பொதுமக்களுக்கு,
பெரிதாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என
வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.அக்., 21 முதல்
23 வரை, ஆயுத பூஜை, விஜய தசமி, மொகரம்
ஆகிய பண்டிக்கைக்காக அரசு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது; 24ம் தேதி, நான்காம்
சனிக்கிழமை என்பதால் வங்கிகள் இயங்காது.
எனவே, 21 முதல் 25ம்தேதி வரை தொடர்
விடுமுறை என்பதால், பல துறை சார்ந்த பணிகள்
பாதிக்க வாய்ப்புகள் உள்ளது.இதனால், தங்கள்
பணிகளுக்கு அன்றாடும் வங்கிகளை சார்ந்துள்ள
பொதுமக்களும் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
தொடர் விடுமுறை என்பதால், தங்கள் வங்கி
பணிகளை முன்கூட்டியே முடிக்க பொதுமக்கள்
திட்டமிட்டு செயல்படுத்துவது அவசியம்.அகில
இந்திய வங்கி ஊழியர்கள் சங்க செயற்குழு
உறுப்பினர் வணங்காமுடி கூறுகையில், ''தொடர்
விடுமுறை காரணமாக பொதுமக்கள் பதட்டம்
அடைய தேவையில்லை. ஏ.டி.எம்.,களில்
வெளிநபர் ஒப்பந்ததாரர் மூலமே பணம்
நிரப்பப்படுகிறது.
இதனால், பண பட்டுவாடாவில் எவ்வித
சிக்கல்களும் இருக்காது. பண பரிவர்த்தனைகளை
அந்தந்த வங்கிகளின், 'இ- சேவை' (நெட்
பேங்கிங்) வாயிலாக பூர்த்தி செய்துகொள்ளலாம்.
தொழில்நுட்ப உதவியால் பல சிரமங்கள்
தவிர்க்கப்பட்டுள்ளது. வங்கிகளின் 'இ-சேவை'
வசதிகளின் செயல்பாட்டில் இல்லாத
பொதுமக்கள், முன்கூட்டியே
திட்டமிட்டுக்கொள்வது அவசியம்,'' என்றார்.

No comments:

Post a Comment