FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

4 October 2015

வாக்காளர்களே மிஸ் பண்ணாதீங்க.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று 2வது கட்ட சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் வாக்குச்சாவடி
மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்
சேர்க்க 2வது கட்ட சிறப்பு முகாம் இன்று
நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை
5 மணி வரை பொதுமக்கள் நேரில் சென்று
விண்ணப்பம் அளிக்கலாம்.
2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை
தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு
சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பட்டியல்களின்
சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்ய இந்திய
தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வருகிற ஜனவரி 1ம் தேதியுடன் 18
வயது நிறைவடைபவர்கள் வாக்காளர் பட்டியலில்
புதிதாக பெயர் சேர்த்துக்கொள்ள
அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்
பெறாதவர்களும் பெயர் சேர்த்தல், நீக்கம்,
திருத்தம், இடம் மாறுதல் செய்து கொள்ள
வருகிற 14ம் தேதி வரை அலுவலக நாட்களில்
அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு
சென்று விண்ணப்பம் அளிக்கலாம்.
elections.tn.gov.in/eregistration என்ற
இணையதளம் மூலமும் பெயர் சேர்க்க, நீக்கம்
செய்யலாம்.
இந்நிலையில் அலுவலகம் செல்பவர்களுக்கு
வசதியாக, மிழகம் முழுவதும் அனைத்து
வாக்குச்சாவடிகளில் இன்று 2ம் கட்ட சிறப்பு
முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக
தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா
கூறும்போது, “2வது கட்ட சிறப்பு முகாம்
தமிழகம் முழுவதும் உள்ள 65 ஆயிரம்
வாக்குச்சாவடிகளில் இன்று காலை 10 மணி
முதல் 5 மணி வரை நடைபெறும். 18 வயது
நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில்
இதுவரை பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க
மற்றும் நீக்கம் செய்ய விண்ணப்பம் செய்யலாம்”
என்றார்.
முகவரி சான்று கட்டாயம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம்
அளிக்கும்போது புகைப்படத்துடன், கூடுதலாக
வசிப்பிட முகவரி சான்றும் சமர்ப்பிக்க
வேண்டும். ரேஷன் கார்டு, வங்கி புத்தகம்,
ஓட்டுநர் உரிமம், சமையல் எரிவாயு இணைப்பு
ஆகியவற்றின் சமீபத்திய ரசீது அல்லது ஆதார்
அட்டை போன்றவற்றை முகவரி சான்றாக
சமர்ப்பிக்கலாம். 18 வயது முதல் 25 வயதுள்ள
மனுதாரர்கள் வசிப்பிட சான்றிதழுடன் வயது
சான்றிதழையும் கட்டாயம் அளிக்க வேண்டும்.
பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் பெயர்கள்,
கள ஆய்வுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில்
சேர்க்கப்படும். இதைத்தொடர்ந்து புதிய
வாக்காளர் பட்டியல் 2016ம் ஆண்டு ஜனவரி
மாதம் 11ம் தேதி வெளியிடப்படுகிறது. ஜனவரி
25ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தையொட்டி
புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு வண்ண
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள
அட்டை வழங்கப்படும்.

No comments:

Post a Comment