FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

24 September 2015

TNPSC ல் ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில்
ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள்
நடத்தப்பட்டதாக சட்டப்பேரவையில்
தெரிவிக்கப்பட்டது. தேர்வாணையத்தின் அறிக்கை
(2009 முதல் 2014 வரை), சட்டப்பேரவையில்
புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் மூலமாக வெளியிடப்படும்
தேர்வு அறிவிக்கைகளின் சதவீதம் தொடர்ந்து
அதிகரித்து வருகிறது. கடந்த 2012-13ஆம்
ஆண்டில் மட்டும் 51 சதவீதம் அளவுக்கு தேர்வு
அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும்,
அந்த ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள்
நடத்தப்பட்டன.
கடந்த 2013-14 ஆம் ஆண்டில் 14 தேர்வுகள்
நடத்தப்பட்டுள்ளன. அந்த ஆண்டில், பணி
நியமனத்துக்காக மட்டும் 15 ஆயிரத்து 668 பேர்
பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் என
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment