FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

20 September 2015

நெட் இணைப்பு கம்ப்யூட்டர் எண்ணிக்கையை தாண்டுது ஸ்மார்ட்போன்!

உலகம் முழுவதும் இன்டர்நெட் இணைப்புடன் கூடிய கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையை இன்டர்நெட் இணைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை முந்துகிறது.

இக்கால இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை சாதாரண மொபைல் போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கு மாறி வருகின்றனர். இந்த வகை போன்களில் இன்டர்நெட் இணைப்பு பெறும் வசதி இருப்பதால், தேவையான எல்லா விஷயங்களையும் போன்களிலேயே பார்த்துக்கொள்ளலாம். இன்டர்நெட் இணைப்புடன் கூடிய கம்ப்யூட்டர்களை தேடி அலைய வேண்டியதில்லை. இதனால், இன்டர்நெட்டுக்காக கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவோரின் குறையத் துவங்கி உள்ளது.



ஆய்வு:

அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை 34 நாடுகளில் குளோபல் வெப் இண்டக்ஸ் என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. இதில் கம்ப்யூட்டரை பயன்படுத்துவோரைவிட, மொபைல் போன்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

இப்போதைக்கு 88 சதவீதம் பேர் இன்டர்நெட் பார்க்க கம்ப்யூட்டர் அல்லது டேப்லெட்டை பயன்படுத்துகின்றனர். 79 சதவீதம் பேர் மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த வித்தியாசம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து, மொபைல் போன்களில் இன்டர்நெட் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.

2012ல் கம்ப்யூட்டர்களில் சராசரியாக 4.31 மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினர். இது இந்த ஆண்டு முதல் காலாண்டில் சராசரியாக 4.05 மணி நேரமாக குறைந்துள்ளது. இதே கால கட்டத்தில் மொபைல் போன்களில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் சராசரியாக 1.24 மணி நேரம் பயன்படுத்தினர். இது இப்போது சராசரியாக 2.01 மணி நேரமாக அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment