FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

21 September 2015

கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு!

கல்வியில் சிறந்து விளங்கி, வசதியின்றி கல்வியை தொடர முடியாமல் சிரமப்படும் சிறுபான்மையின மாணவர்களுக்கு, உதவிடும் வகையில், மத்திய அரசின், மவுலானா ஆசாத் தேசிய கல்வி
உதவித்தொகை திட்டம் செயல்படுகிறது.
இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், ஜெயின் ஆகிய மதங்களை சார்ந்த சிறுபான்மையின மாணவர்கள், 10ம் வகுப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் மத்திய, மாநில அரசால் அஙகீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், பிளஸ் 1 படிப்பவராக இருத்தல் வேண்டும். குடும்ப வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருத்தல் வேண்டும். வருமான சான்றிதழ், ஓய்வூதிய ஆணை, 20 ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் செய்திருக்க வேண்டும். அதை விண்ணப்பத்துடன் இணைத்தல் வேண்டும். தேவையான ஆவணங்களை இணைத்து, தாங்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, www.maef.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

சென்னை மாவட்டத்தில் உள்ள, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும், கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பள்ளிப்படிப்பு, மேற்படிப்பிற்காக, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 2015-16ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகை பெற விண்ணப்பிக்க, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்கள், கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை, தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் வரும் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பு முதல் பி.எச். டி., தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்கள், www.scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு அக்.,15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment