FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

24 September 2015

7வது சம்பள கமிஷன் அறிக்கை விரைவில் தயார்!

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, ஏழாவது சம்பள
கமிஷன், விரைவில் தன் அறிக்கையை தாக்கல்
செய்ய விருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது. இதன் மூலம், 48 லட்சம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 55 லட்சம்
ஓய்வூதியர்கள், பயனடைவர் என,
எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு
ஊழியர்களுக்கான, சம்பள உயர்வு குறித்த
அறிக்கை தயாரித்து, அரசுக்கு ஆலோசனை
வழங்குவதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை,
சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது.
கடைசியாக, 2006ம் ஆண்டு, ஆறாவது சம்பள
கமிஷன் அளித்த பரிந்துரைகளின் படி, மத்திய
அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும்
ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில்,
ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது.
அந்த குழுவினர் அரசு ஊழியர்களுக்கு
தேவையான முக்கிய அம்சங்கள் குறித்து
ஆராய்ந்து, சம்பள விகிதத்தை நிர்ணயிக்கும்
பரிந்துரையை தயார் செய்துள்ளனர். விரைவில்
இந்த அறிக்கையை அரசிடம் தாக்கல்
செய்யவிருப்பதாகவும் தகவல்
வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை தாக்கல்
செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சம்பள
உயர்வு அறிவிக்கப்பட்டால், 48 லட்சம் மத்திய
அரசு ஊழியர்கள் மற்றும், 55 லட்சம்
ஓய்வூதியர்கள் பலனடைவர். மத்திய அரசை
தொடர்ந்து, மாநில அரசுகளும், இந்த
அறிக்கையின் அடிப்படையில், தேவையான சில
மாற்றங்களை செய்து, மாநில அரசு
ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அறிவிக்கும்
என்பதால், அறிக்கை, அரசு ஊழியர்களிடையே
பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment