FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

27 April 2022

வரும் 22ம் தேதிக்குள் விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்





கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் சேர 31 மாவட்டங்களில் மார்ச் 23ம் தேதி, புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 24ம் தேதி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மட்டும் 25ம் தேதி மாவட்ட அளவிலான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.



திருவள்ளூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டும். www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கான கடைசி நாள் மார்ச் 22ம் தேதி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment