FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

29 June 2016

7வது சம்பள கமிஷனுக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடில்லி : டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூடி உள்ளது. இந்த கூட்டத்தில் 7 வது சம்பள கமிஷன் கமிட்டி அளித்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
சம்பள கமிஷன் பரிந்துரை குழுவின் கோரிக்கைகள் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டது. இதனால் 7வது சம்பள கமிஷன் அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் மத்திய அரசு 7 வது சம்பள கமிஷனுக்கு ஒப்புதல் வழங்கியது.
7 வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்படுவதன் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர். 7 வது சம்பள கமிஷன் அமல்படுத்தபட்டால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் வெகுவாக உயரும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும் என்பதால் கார்கள் மற்றும் வீடு விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment