FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

29 June 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும்.

மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 14.27 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7-வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்த 7-வது ஊதிய குழு பரிந்துரை செய்ததால், அதை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து சமீபத்தில் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படை யில் நிதியமைச்சகம் குறிப்பு தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.
இந்நிலையில், இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஊதிய குழுவின் பரிந்துரைகள் கடந்த ஜனவரி 1-ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளால் ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும். பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என சுமார் 1 கோடி பேர் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment